ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 ஏவுகணைகள் சோதனை

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்து உள்ளது.இந்த நிலையில் ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் அனைத்தும் நீண்ட தூரம் சென்று தாக்க கூடியவை.

‘டியூ-160, டியூ-95 எம்.எஸ். மற்றும் டியூ-22 எம் 3’ ஆகியவையும் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வகையிலான ஏவுகணைகளும் நேற்று பரிசோதிக்கப்பட்டன.

இச்சோதனை ரஷியாவின் வடமேற்கில் உள்ள பிலெட்ஸ் ராணுவ தளத்தில் நடந்த வீரர்கள் பயிற்சியின் போது நடத்தப்பட்டது. இவை கஜகஸ்தானில் உள்ள குரா என்ற இடத்தில் உள்ள சோதனை மையத்தை குறி வைத்து தாக்கின.

எனவே இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷியா ‘தொபோல்’ ரக ஏவுகணைகளை வீசி பரிசோதித்தது. இதுவும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply