களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்டார்

அரசியலில் களமிறங்கப் போவதாக கூறி வரும் நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி வரும் அவர், நேற்று தனது டுவிட்டர் பதிவில் வடசென்னைக்கு வரக்கூடிய ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விளக்கியிருந்தார். ‘தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து.  கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன’ என புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் இன்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசினார். அப்போது, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

மக்கள் பிரச்சினைகளுக்காக டுவிட்டரில் மட்டுமே இதுவரை தனது கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல், இன்று முதல் முறையாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply