எய்ட்ஸைப் பரப்பிய இத்தாலியருக்கு 24 வருட சிறை

முப்பது பெண்களுக்கு வேண்டுமென்றே ‘எய்ட்ஸ்’ நோயைப் பரப்பிய இத்தாலியருக்கு 24 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.வெலன்டினோ தலுட்டோ (33) என்ற இந்த கணக்காளர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று 2006ஆம் ஆண்டு செய்யப்பட்ட பரிசோதனையில் உறுதியானது.இதையடுத்து, சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் இணையதளங்களில் புனை பெயரில் பல பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் பாதுகாப்பாற்ற முறையில் உறவுகொண்டு எய்ட்ஸ் நோயை அவர்களுக்கும் கடத்தியுள்ளார்.

“உறவின்போது ஆணுறை அணிந்துகொள்ளுமாறு கேட்டுகொண்டபோது, தனக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றும், அண்மையில்தான் எய்ட்ஸ் பரிசோதனை செய்துகொண்டதாகவும் அதில் தனக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்று தெரியவந்ததாகவும் கூறி உறவுகொண்டார்” என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண்களில் பதினான்கு வயதுச் சிறுமியும் அடக்கம்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வெலன்டினோ வேண்டுமென்றே எய்ட்ஸை மற்றவர்களுக்குக் கடத்தியதாகக் கூறி, அவருக்கு 24 வருட சிறைத் தண்டனை வழங்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply