ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்

ஆஸ்திரேலியா நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக வாக்குரிமை பெற்ற பொதுமக்களிடையே நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 80 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 62 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 150 எம்.பி.க்களில் 145 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ கடந்த 8-ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்ளும் தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே முறைப்படி அரசிடம் விண்ணப்பம் செய்து, அனுமதி பெற்றுதான் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சமீபத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி வாக்கில் நடைபெறலாம் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சிட்னி நகரில் லாரென் பிரைஸ்(31) – அமி லேக்கர்(29) ஜோடியும், மெல்போர்ன் நகரில் அமி(36) – எலிசி மெக்டொனால்ட்(28) ஜோடியும் அந்நாட்டின் முதல்முறை ஓரினச் சேர்க்கையாளர் திருமண நிகழ்ச்சியில் இன்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொள்ளும் தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே முறைப்படி அரசிடம் விண்ணப்பம் செய்து, அனுமதி பெற்றுதான் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது சட்டமாக உள்ள நிலையில், சூழ்நிலை கருதி சிறப்பு நிகழ்வாக இந்த திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply