குஜராத் கடலில் சரக்கு கப்பலில் விஷவாயு தாக்கி சீனர்கள் இருவர் பலி

ஹாங்காங்கை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சிங்கப்பூரில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள நவ்லகி துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது. இதில் சீனர்கள் உள்பட பல பணியாளர்கள் இருந்தனர். இந்த கப்பல் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரோசி துறைமுகம் அருகே நேற்று வந்த போது கப்பலில் விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த 3 சீனர்கள் மயங்கி விழுந்தனர். _

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாம்நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொருவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரக்கு கப்பலில் விஷவாயு தாக்கி சீனாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply