ரெலோவின் உயர்மட்டக் குழு நாளை வவுனியாவில் கூடுகிறது!!
வடக்கு மாகாண சபையில் எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில், ரெலோ உறுப்பினர்கள் என்ன பேசவேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ரெலோவின் உயர்மட்டக் குழு கலந்துரையாடல் நடத்தவுள்ளது. வவுனியாவில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் ரெலோவின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 9 பேரும் பங்கேற்கவுள்ளனர்.
உயர்மட்டக் குழுவில் இல்லாத வடக்கு மாகாண சபையின் ரெலோவின் மூன்று உறுப்பினர்களும் அந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையில் எதிர்வரும் திங்கட் கிழமை,அமைச்சராக இருந்த டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனீஸ்வரன் அமைச்சாராகத் தொடர்கின்றார் என்று வழங்கிய இடைக்கால கட்டளையால்,வடக்கு அமைச்சரவை செயற்பட முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.இந்த இக்கட்டான நிலமை தொடர்பிலேயே திங்கட்கிழமை சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply