நம்பிக்கையை வெல்லும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும் : ஜஸ்டின் ட்ருதியே

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நேற்று வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் குறித்த இனக்கலவரத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும், 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் கனடாவினால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 1800 இலங்கை தமிழர்கள் கனடாவில் பாதுகாப்பை பெற்றனர்.

இந்தநிலையில் அவர்கள் கனடாவுக்கு பாரிய பணிகளை செய்துள்ளனர். எனினும் இலங்கையில் போர் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த போதும் இன்னும் நல்லிணக்கம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply