மூன்றாவது முறையாக ஜனாதிபதியாவேன்: மஹிந்த
இலங்கையில் தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. இவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் 2010-ஆம் ஆண்டு, இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர், மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது என்கிற சட்டத்தை மாற்றியமைத்தார். அதன்படி 2015-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார். இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா அதிபர் ஆனார்.
அதன் பின்னர் 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை மாற்றி இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர் மூன்றாவது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது என்கிறபடி மீண்டும் சட்டம் திருத்தப்பட்டது. இந்த நிலையில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக முடியும் என தான் நம்புவதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இதுபற்றி பேசிய அவர்,
அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட முடியும் என்கிற கருத்து இருக்கிறது. 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இதில் எங்களுக்கு வெற்றி கிட்டும் என்கிற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply