சைக்கிளில் வேகமாக சென்றதாக 2000 ரூபாய் அபராதம் வசூலித்த போலீஸ்
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசிம் என்ற இறைஞர் கேரளாவின் கும்பாலாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த நெடுஞ்சாலை காவல்துறையினர், வேகமாக சைக்கிள் ஓட்டியதாகவும், ஹெல்மெட் போடவில்லை என்றும் கூறி 2000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.
2000 ரூபாய் அபராதம் வாங்கிவிட்டு 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுத்து அந்த இளைஞரை அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply