மஹிந்தவை பிரதமராக ஏற்பதற்கு சர்வதேசம் தாமதம்: அரசியல் அவதானிகள்

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசம் அந்நியமனத்தை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எந்ததொரு நாட்டிலும் புதிதாக ஜனாதிபதி அல்லது பிரமர் பதவியேற்றால் ஏனைய நாடுகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆனால் மஹிந்தவுக்கு சீனாவை தவிர வேறு எந்ததொரு நாடும் இன்னும் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது ஏனைய நாடுகளும் எதிர்பார்த்திருக்காத ஒன்றெனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் வழமையாக அண்டை நாடான இந்தியாவே இவ்வாறான விடயங்களில் முதலில் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆனால் அந்நாடே இம்முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் சீனத் தூதரகம் மாத்திரம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply