சிறிரெலோ கட்சியின் செட்டிகுளம் பிரதேச சபை வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார் வடமாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இனைந்து போட்டியிட்ட சிறிரெலோ கட்சியினர் முதன்முறையாக செட்டிகுளம் பிரதேச சபையினை கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் 2019 ம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தினை இன்று (28.12.2018) சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் அந்தோணி அவர்கள் சபையில் முன்வைத்திருந்த நிலையில் சபை உருப்பினர்களால் குறித்த வரவுசெலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளாக தவிசாளர் தெரிவித்துள்ளதுடன் 2019ல் செட்டிகுளம் பிரதேசத்தை சிறந்த ஒரு அபிவிருத்தி மிக்க பிரதேசமாக வளர்த்து காட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply