எமது ஆட்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவோம் : மஹிந்த

பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட விருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவதற்கு தமது அரசாங்கத்தில் நடவடிக்கை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டம் தற்போது பாராளுமன்ற அமர்வு கண்காணிப்பு குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவிலுள்ள தமது கட்சி தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதன் காரணமாக சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply