எமது அரசியல் பயணத்தில் அபிவிருத்தியும் சுதேசிய உணர்வும் இரு கண்கள் : சிறீ ரெலோ கட்சி தெரிவிப்பு
எமது அரசியல் பயணத்தில் அபிவிருத்தியும் சுதேசிய உணர்வும் இரு கண்கள் : சிறீ ரெலோ கட்சி தெரிவிப்பு
அக் கட்சியின் கொள்கை விரிவாக்கல்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எதிர் வரும் சனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
எனினும் தற்போதைக்கு இறுதி முடிவினை மேற்கொள்ள முடியாதுள்ளது.
அரசியல் நிலமைகளை உன்னிப்பாக அவதானித்து வண்ணம் உள்ளோம் என்பது உண்மையே.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவ போர் இடம்பெற்று வருகிறது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி சனாதிபதி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போல கண்ணை மூடி கொண்டு பக்தி அரசியலை வெளிப்படுத்துவதற்கான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க சிறீ ரெலோ கட்சி விரும்பவில்லை.
வன்னியை பொறுத்த வரை சிறுக சிறுக சேர்த்த வாக்கு வங்கிகளை இழப்பதற்கு எமது கட்சி தயார் இல்லை.
ஆகவே வன்னி மக்களின் உயரிய நலன்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்களால் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் .
தேர்தல் நேரங்களில் சிறு நிதி உதவிகளை மேற்கொண்டு வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றியதும் தமிழ் மக்களின் நலன்களை மாற்றான் தாய் பிள்ளைகள் போல் நடத்துகின்றனர் இது வேதனையானது இந்நிலை மாற வேண்டும்.
அதனால் தான் ஆளுமை மிக்க அனுபவம் கொண்ட ஒரு தலைமைத்துவத்தை ஆதரிப்பது முக்கியமானது.
அப்போது தான் வன்னி மக்களின் அடிப்படை உட் கட்டுமானங்களை ஆவது பூர்த்தி செய்ய முடியும்.
ஆகவே அவ்வாறான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்வதற்கு தேசிய அரசியலில் பலம் மிக்க கூட்டு ஒன்றை மேற்கொள்வதுடன் பிராந்திய அரசியலில் வன்னி சுதேசிய சிந்தனை உடைய ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக வர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.
சிலர் தமிழ் மக்களின் உணர்வுகளை விலை கொடுத்து அடிமையாக்க கொழும்பில் இருந்து படை எடுக்கின்றனர்.
எம்மை பொறுத்த வரை எமது மக்களின் உணர்வுகளை பயன்படுத்தி அரசியல் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என்பதுடன் தமிழ் தேசிய முன்னணியினர் கனவு காண்பதை போல சனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் ஐக்கிய நாடுகளிடம் நீதி பெற்று தருவதாக பிரச்சாரம் செய்து வருடாவருடம் புலம் பெயர்ந்த தனவந்தர்களின் நிதியில் ஜெனீவாவிற்கு சுற்றுலா சென்று அவர்களது உறவினர்களுடன் கூடி குலாவுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இன்று வரையும் அப்பாவி மக்கள் நடு தெருவில் போராட்டங்களை மேற்கொள்ளும் பொருட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலில் விடப்பட்டுள்ளனர்.
எமது கட்சி ஒரு போதும் நியாயமான சாத்தியப்பாடான தமிழ் மக்களின் உரிமைகளிற்காக பின் நிற்காது என்பதுடன் எம்மை தமிழ் தேசிய சிந்தனைக்கு எதிரானவர்களாக சிலர் காண்பிப்பதற்கு பகிரங்க பிரயத்தனம் செய்து வருகின்றனர். அவர்களின் ஆசைகள் ஒரு போதும் நிறைவேறாது. நாம் தமிழ் தேசியத்தை ஆதரிக்கின்ற அதே வேளை பிராந்திய இருப்பை முஸ்லிம்களிடம் இருந்து தக்க வைக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே எமது கட்சி அபிவிருத்தியும் சுதேசிய சிந்தனையும் எமது அரசியல் பயணத்தில் இரு கண்கள்.
எனவே யதார்த்தமான விடயங்களிற்கும் நடைமுறை சாத்தியம் சார்ந்த விடயங்களையும் ஆராய்ந்து அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் அபிலாசைகளிற்கும் விருப்பங்களிற்கும் முக்கியதத்துவம் கொடுத்தே சனாதிபதி தேர்தலில் வேட்பாளரை ஆதரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை விரிவாக்கல்பிரிவு
சிறீ ரெலோ கட்சி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply