கூட்டமைப்பு ஜனாதிபதியை இன்று மீண்டும் சந்திக்கிறது

தமிழ் மக்களின் பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.இந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

காணி விடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்றைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றாது இராணுவ கெடுபிடிகளை அதிகரிக்கும் அரசாங்கதின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply