தென்கொரியா அதிபர் அலுவலகத்தில் விழுந்த குப்பை பலூன்

Wednesday, July 24th, 2024 at 16:29 (SLT)

கொரியாவின் ஜனாதிபதி வளாகத்தில் விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடகொரியாவின் பலூன்கள் எல்லையைத் தாண்டி இன்று காலை தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்த நிலையில் தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் மீது குப்பை பலூன்கள் விழுந்தன.

மேலும் வாசிக்க >>>

நேபாளம் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

Wednesday, July 24th, 2024 at 16:22 (SLT)

நேபாளத்தில் இன்று புதன்கிழமை நடந்த விமான விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் விமானி காயமடைந்தார். விமானியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் வழியில் உயிரிழந்தாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

1600 நிறுவனங்களின் நிலையான சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை : அமைச்சர் சியம்பலாபிட்டிய

Wednesday, July 24th, 2024 at 16:15 (SLT)

அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். 1600க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேஷபந்து தென்னகோனுக்கு இடைக்கால தடை உத்தரவு

Wednesday, July 24th, 2024 at 11:53 (SLT)

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்

Wednesday, July 24th, 2024 at 11:49 (SLT)

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 22 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்பை விட தண்டனையே அவசியம் : வலியுறுத்தும் அதாவுல்லா

Wednesday, July 24th, 2024 at 11:45 (SLT)

ஜனாஸா எரிப்பு தொடர்பாக மன்னிப்புக் கெட்பதை விடுத்து அதற்குக் காரணமானவர்களுக்கத் தண்டனை பெற்றக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Wednesday, July 24th, 2024 at 11:40 (SLT)

நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில், முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தல் நடத்த பணமில்லை : ஜனாதிபதி

Wednesday, July 24th, 2024 at 11:37 (SLT)

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு போதியளவு பணமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுய ஆட்சிக்கான உரிமை வழங்கப்படும் : துமிந்த நாகமுவ

Wednesday, July 24th, 2024 at 9:45 (SLT)

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுய ஆட்சி உரிமையை வழங்கும் முறைமையை மக்கள் போராட்ட முன்னணி முன்வைப்பதாக முன்னணியின் செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ கூறுகிறார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது

Wednesday, July 24th, 2024 at 9:41 (SLT)

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

2019 முதல் இவ்வருட ஜூன் மாதம் வரை 4,74,142 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர் : மனுஷ நாணயக்கார

Wednesday, July 24th, 2024 at 9:37 (SLT)

2019 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஜூன் மாதம் வரை 4,74, 142 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் 3 இலட்சத்து 1198 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரிகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

க்ளப் வசந்த கொலை : மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

Wednesday, July 24th, 2024 at 9:32 (SLT)

‘க்ளப் வசந்த’ எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்

Wednesday, July 24th, 2024 at 9:28 (SLT)

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் செவ்வாய்க்கிழமை மாலை (23) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்ஞப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப் பரிசில்கள் பிரிவேனா மற்றும் பிக்குணி மாணவர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் வழங்கப்படும்

Wednesday, July 24th, 2024 at 9:22 (SLT)

3000 பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (24) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் : சாமர சம்பத் தசநாயக்க

Wednesday, July 24th, 2024 at 9:17 (SLT)

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>