18 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

Tuesday, November 12th, 2024 at 12:20 (SLT)

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தொலைபேசி மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல தடை

Tuesday, November 12th, 2024 at 12:16 (SLT)

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தொலைபேசி, ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு வருகிறார் அமெரிக்க உலக இளையோர் விவகாரங்களுக்கான சிறப்பு தூதர்

Tuesday, November 12th, 2024 at 12:05 (SLT)

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், அபி பின்கெனவர் (Abby Finkenauer) இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

காணாமல்போயிருந்த மூதாட்டி வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

Tuesday, November 12th, 2024 at 12:02 (SLT)

கண்டி, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, அம்பதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய மூதாட்டி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வடக்கு கடலில் வைத்து 12 இந்திய மீனவர்கள் கைது

Tuesday, November 12th, 2024 at 11:59 (SLT)

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தலை நடத்த கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் : தேர்தல்கள் ஆணைக்குழு

Tuesday, November 12th, 2024 at 11:55 (SLT)

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

Tuesday, November 12th, 2024 at 11:52 (SLT)

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தை மீளமைக்க அதிகாரிகள் தற்போது செயற்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


பொதுத்தேர்தலை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

Tuesday, November 12th, 2024 at 11:47 (SLT)

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அறுகம்பை பயண எச்சரிக்கையை அமெரிக்க நீக்குமாறு இலங்கை வேண்டுகோள்

Tuesday, November 12th, 2024 at 11:43 (SLT)

அறுகம்பை தாக்குதல் தொடர்பில் அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கையை அந்த நாடு நீக்கிக்கொள்ளவேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு

Tuesday, November 12th, 2024 at 11:40 (SLT)

இன்று முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் வாசிக்க >>>

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் : ரணில் விக்கிரமசிங்க

Monday, November 11th, 2024 at 11:07 (SLT)

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் சனிக்கிழமை (09) உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் தமது போராட்டம் ஆரம்பமாகும் என்றார்.

மேலும் வாசிக்க >>>

வீதிக்கு தள்ளப்பட்ட நபர் வாகனத்துடன் மோதி பலி

Monday, November 11th, 2024 at 11:02 (SLT)

வவுனியா நெளுக்குளம் – கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வீதிக்கு தள்ளப்பட்ட நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்துடன் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சுகாதார அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பாரிய மோசடி

Monday, November 11th, 2024 at 10:59 (SLT)

சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் சுகாதார ஊழியர்கள் மற்றும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தந்தையின் ஜீப் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

Monday, November 11th, 2024 at 10:55 (SLT)

மருதானை – புகையிரத ஊழியர்களுக்கான வீட்டுத் தொகுதியில் ஜீப் ஒன்று வீடொன்றுக்கு அருகில் நிறுத்தச் சென்ற போது, ​​சிறு குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும்:மனோ கணேசன்

Monday, November 11th, 2024 at 10:52 (SLT)

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைதான் வலியுறுத்துகிறது.

மேலும் வாசிக்க >>>