யாழ். இளையோருக்கு வெளிநாட்டு ஆசை காட்டி 06 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர் கைது

Thursday, July 18th, 2024 at 11:35 (SLT)

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி

Thursday, July 18th, 2024 at 11:31 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்

Wednesday, July 17th, 2024 at 10:11 (SLT)

அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தலை பிற்போடும் யோசனைகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் : நாமல்

Wednesday, July 17th, 2024 at 10:02 (SLT)

தேர்தலை பிற்போடும் யோசனைகளை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்- 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயம்

Wednesday, July 17th, 2024 at 9:59 (SLT)

கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர்.

மேலும் வாசிக்க >>>

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை உயர்வு

Wednesday, July 17th, 2024 at 9:51 (SLT)

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினிகபி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நீதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

செலவுகள் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சந்திப்பு

Wednesday, July 17th, 2024 at 9:49 (SLT)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சடலமொன்று மீட்பு

Tuesday, July 16th, 2024 at 9:57 (SLT)

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தங்கியிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) இரவு கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

சிறைக்கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு

Tuesday, July 16th, 2024 at 9:54 (SLT)

இன்று 119வது சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்தன

Tuesday, July 16th, 2024 at 9:49 (SLT)

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இதுவரை இந்த மனிதப் புதைகுழியில் இருந்து 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில்குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் : மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Tuesday, July 16th, 2024 at 9:42 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால்டிரம்ப்உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் வகையில் விரைவில் புதிய சட்டங்கள் : நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்

Tuesday, July 16th, 2024 at 9:36 (SLT)

எமது நாட்டில் அரசாங்கத்தினால் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்யாமலும் செய்யக்கூடாத விடயங்களை செய்ததாலும் நாடு சீரழிந்துள்ளது. அதனால் நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் வகையில் மேலும் பல புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து சீன முகவரகத்தின் பிரதித்தலைவரிடம் விளக்கமளித்த திறைசேரி செயலாளர்

Tuesday, July 16th, 2024 at 9:32 (SLT)

சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தின் பிரதித்தலைவருடனான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கடன்மறுசீரமைப்பு செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை உறுதிப் பத்திரங்கள் : தலைவர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை

Tuesday, July 16th, 2024 at 9:24 (SLT)

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உதா கம்மானங்களிலும் உரித்துரிமை பத்திரம் பெறாத 34,000 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அருச்சுனா

Monday, July 15th, 2024 at 12:04 (SLT)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>