திருகோணமலையில் ஒருவர் காருடன் எரித்துக்கொலை

Monday, July 15th, 2024 at 12:00 (SLT)

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் : நட்டஈடு வழங்க 06 வருட கால அவகாசம் கோரும் மைத்திரி

Monday, July 15th, 2024 at 11:53 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சஜித் பிரேமதாசவிற்கு வெற்றி வாய்ப்பே அதிகம் : வே. இராதாகிருஷ்ணன்

Monday, July 15th, 2024 at 10:45 (SLT)

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி,அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பணிக்கு திரும்பும் ஒரு குழு – பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் மற்றொரு குழு

Monday, July 15th, 2024 at 10:41 (SLT)

பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் இன்று (15) முதல் பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்களை கோரும் திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

Monday, July 15th, 2024 at 10:37 (SLT)

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யூரோ கிண்ணம் 2024 – இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி: தங்க காலணி ஆறு வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பு

Monday, July 15th, 2024 at 10:34 (SLT)

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன்படி, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஸ்பெயின் வீழ்த்தியது. இதன்மூலம், ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நைஜீரியாவில் இடிந்து விழுந்த கட்டிடம்: 22 மாணவர்கள் உயிரிழப்பு

Sunday, July 14th, 2024 at 7:15 (SLT)

நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று கொண்டிருந்தபோது, பள்ளியின் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க >>>

கொலை அச்சுறுத்தல் விடுத்தாலும் பாதாள உலகக் கும்பல் அழிக்கப்படும்: பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

Sunday, July 14th, 2024 at 7:12 (SLT)

பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை கொல்லப்போவதாக தகவல் பரப்பி, அச்சுறுத்தல் விடுத்து பெயர் பட்டியல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பயமுறுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், எதிரான நடவடிக்கைகளை நிறுத்த பொலிஸார் தயாராக இல்லை என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

Sunday, July 14th, 2024 at 7:07 (SLT)

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல்: தேர்தல் பிரச்சாரத்தின் போது சம்பவம்

Sunday, July 14th, 2024 at 7:03 (SLT)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரமொன்றின் போது தன்மீது துப்பாக்கி இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.


புளியங்கூடல் பிள்ளையார் ஆலய நகைகள் மாயம் : விசாரணை கோரி நிற்கும் அடியவர்கள்

Saturday, July 13th, 2024 at 12:23 (SLT)

யாழ்ப்பாணம் புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர் அது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

யாழில் பேருந்தில் பயணித்தவர்கள் வாள் வெட்டு : சாரதி மற்றும் பயணி படுகாயம்

Saturday, July 13th, 2024 at 12:20 (SLT)

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் , பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த பேருந்தில், கைதடி பகுதியில் இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர்

மேலும் வாசிக்க >>>

வீதி விபத்துக்களால் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு : பணிப்பாளர் சத்தியமூர்த்தி

Saturday, July 13th, 2024 at 12:14 (SLT)

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஓரணியில் நின்று தமிழர் வாக்குகளை பலப்படுத்தி பேரம் பேசு சக்தியாக மாறுங்கள் : கூட்டமைப்புக்கு இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோசனை

Saturday, July 13th, 2024 at 12:12 (SLT)

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாலை கொழும்பில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் கோவிந்தன் கருணாகரன்,வினோ நாகலிங்கம், புளொட் சார்பில் பவன், ஐனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் ,EPLRF கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி ரணில் என்ன முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெற்றே தீரும் : அனுரகுமார திஸநாயக்க எம். பி

Saturday, July 13th, 2024 at 12:09 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் சரி ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச வர்த்தக பிரமுகர்களை வெள்ளிக்கிழமை(12) மாலை காரைதீவில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>