புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ. பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

Saturday, July 13th, 2024 at 12:05 (SLT)

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ.பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று (12) பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும் வாசிக்க >>>

சீனாவின் செயற்கை கோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டம் மீண்டும் தோல்வி

Saturday, July 13th, 2024 at 12:01 (SLT)

சீன புத்தாக்க நிறுவனமான ஐ-ஸ்பேஸ் உருவாக்கியுள்ள ரொக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. ஐ-ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 24 மீட்டா் உயரம் கொண்ட, திட எரிபொருளில் இயங்கும் ‘ஹைப்பா்போலா-1’ ரொக்கெட், கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

யாழில் இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Saturday, July 13th, 2024 at 11:59 (SLT)

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(13) முன்னெடுக்கப்பட்டது பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பண்ணாகம் அண்ணா கலைமன்றம் ஆகியன இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

விக்கினேஸ்வரன் எம்.பி தலைமையில் யாழில் இடம்பெறவுள்ள முக்கிய மாநாடு

Saturday, July 13th, 2024 at 11:55 (SLT)

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் இம் மகாநாடு நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று கொலைகள்

Saturday, July 13th, 2024 at 11:14 (SLT)

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது. நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

சஜித்தின் பரந்தப்பட்ட கூட்டணி: கைகோர்க்கும் ஆளும், எதிர்தரப்பு உறுப்பினர்கள்

Saturday, July 13th, 2024 at 6:42 (SLT)

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜூலை இறுதிக்குள் மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்பு: பிரிட்டன் பெண் எம்பியின் ஆச்சரியமான செயல்

Friday, July 12th, 2024 at 12:47 (SLT)

பிரிட்டனியில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்பவர் இங்கிலாந்தில் இளநிலை பட்டம் முடித்துள்ளார். அதன் பின் இவர் அரசியலில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும் வாசிக்க >>>

தினமும் ஒரு தடவையாவது சிரிச்சே ஆகணும் கட்டாய சட்டம் போட்ட ஜப்பான்

Friday, July 12th, 2024 at 12:44 (SLT)

மற்ற விலங்குகளிடம் இல்லாத மனிதர்களிடம் உள்ள பண்புகளில் ஒன்று சிரிப்பது. தினசரி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பது உடல்நலத்தை காக்கவும், நீண்ட ஆயுளுக்கும் உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நகைச்சுவையை கண்டு சிரிப்பதால் மன அழுத்தங்கள் குறைந்து இதயம் சார்ந்த பிரச்சினைகளை வராமல் தடுக்கிறது.

மேலும் வாசிக்க >>>

கொவிட் வைரஸின் தீவிரம் ஒரு வாரத்தில் 1,700 பேர் மரணம் உலக சுகாதார அமைப்பு

Friday, July 12th, 2024 at 12:38 (SLT)

கொவிட் வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு: மலர்ச்சாலைக்கு தொலைபேசியில் மர்ம நபரால் மிரட்டல்

Friday, July 12th, 2024 at 12:35 (SLT)

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரபல பாடகர் உள்ளிட்ட ஏழு பேரை கொலை செய்யத் திட்டம்: பாதாள உலகக் குழுக்களின் அடுத்த நகர்வா என சந்தேகம்?

Friday, July 12th, 2024 at 7:57 (SLT)

பாதாள உலகக் குழுக்களின் பிரபல தலைவரான, தற்போது பிரான்ஸில் தலைமறைவாகி வாழும் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் டுபாயில் தலைமறைவாகி இருக்கும் லொக்கு பெட்டீ என்பவரும் இணைந்து இலங்கையின் பிரபல பாடகர் மற்றும் நடிகர் ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் இன்று முதல் நாடளாவிய ரீதியில்: மாவட்டங்களுக்கான திகதி அறிவிப்பு

Friday, July 12th, 2024 at 7:51 (SLT)

கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று வெள்ளிக்கிழமை முதல் (12.07.24) மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவது அவசியம் : அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

Friday, July 12th, 2024 at 7:46 (SLT)

காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் அதேவேளை, நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விளக்கமறியலில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த IP மீது தாக்குதல்

Friday, July 12th, 2024 at 7:41 (SLT)

பணிபுரியும்போது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவருரை மற்றொரு கைதி  கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு : பொது மக்கள் விசனம்

Friday, July 12th, 2024 at 7:38 (SLT)

பசறை நகரில் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுபவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் வாசிக்க >>>