தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும்:மனோ கணேசன்

Monday, November 11th, 2024 at 10:52 (SLT)

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைதான் வலியுறுத்துகிறது.

மேலும் வாசிக்க >>>

அமைச்சர் விஜித விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

Monday, November 11th, 2024 at 10:49 (SLT)

ஶ்ரீலங்கன் விமான சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

லெபனான் பேஜர், வாக்கி – டாக்கி தாக்குதல்களை ஒப்புக் கொண்ட இஸ்ரேலிய பிரதமர்

Monday, November 11th, 2024 at 10:45 (SLT)

முதன்முறையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நெதன்யாகு, லெபனான் பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலடனேயே நடந்ததாக தெரிவித்தார். இதனை நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஒமர் டோஸ்ட்ரி உறுதி செய்தார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் நீதிமன்றில் அறிவிக்கவுள்ள பொலிஸார்

Monday, November 11th, 2024 at 10:41 (SLT)

கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Monday, November 11th, 2024 at 10:38 (SLT)

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெறுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Monday, November 11th, 2024 at 10:35 (SLT)

இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது

Monday, November 11th, 2024 at 10:32 (SLT)

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது. இலங்கை – இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது,

மேலும் வாசிக்க >>>

நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்

Monday, November 11th, 2024 at 10:28 (SLT)

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகள் ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2580 முறைப்பாடுகள் பதிவு

Monday, November 11th, 2024 at 10:23 (SLT)

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை) 2,580 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசியஐக்கிய அரசாங்கம் : விஜித ஹேரத்

Monday, November 11th, 2024 at 10:20 (SLT)

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.


ரயில் இன்ஜின் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் உடல் நசுங்கி பரிதாப மரணம்

Monday, November 11th, 2024 at 10:16 (SLT)

பீகாரில் ரயில் பெட்டியையும், இன்ஜினையும் இணைக்கும் கப்ளிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ரயில்வே ஊழியர், 2 பெட்டிகளின் கப்ளிங்கின் நடுவே சிக்கிக்கொண்டுள்ளார். இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

காசாவில் இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்குதல் பரிதாபமாக உயிரிழந்த 32 பேர்

Monday, November 11th, 2024 at 10:08 (SLT)

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். ஜபாலியா என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றை குறிவைத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

சுன்னாகம் பொலிஸார் மீது இளம் தாய் குற்றச்சாட்டு

Sunday, November 10th, 2024 at 13:16 (SLT)

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி, இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அம்பலாங்கொடை, ஊரவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Sunday, November 10th, 2024 at 13:10 (SLT)

அம்பலாங்கொடை, ஊரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வயோதிபர்

Sunday, November 10th, 2024 at 13:05 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் நான்கு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>