கொரோனா: பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்த வேண்டும். மார்ச் 22 (இன்று) யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சுய ஊரடங்கை பின்பற்றவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இந்த ஊரடங்கு இன்று இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply