அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியருக்கு கொரோனா

மெக்சிகோ நாட்டின் எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து, தடுப்பு காவல் மையத்தில் அடைக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சிகோ எல்லையையொட்டி உள்ள பகுதியில் எல்லை பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மெக்சிகோ எல்லை வழியாக அத்துமீறி நுழைந்த மெக்சிகோ நாட்டினர் 3 பேர் மற்றும் இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில் மெக்சிகோவை சேர்ந்த 3 பேரும் உடனடியாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 31 வயதான இந்திய வாலிபர் தடுப்பு காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய வாலிபருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இந்திய வாலிபர் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ பணியாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply