பென்சில்வேனியாவை வெல்லப் போகிறோம் : ஜோ பைடன் உற்சாகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும் என்ற நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.
கடும் போட்டி உள்ள பென்சில்வேனியாவில் 20 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன, தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இது டொனால்டு டிரம்பிற்கு பெரிய தோல்வியாக அமையும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கடுமையான அழுத்தத்தை அடுத்து, உடனடியாக எண்ணுவதை நிறுத்த மறுத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் பென்சில்வேனியாவில் உள்ள தேர்தல் அதிகாரிகளை தேர்தல் நாளில் (நவம்பர் 3) இரவு 8 மணிக்கு காலக்கெடுவுக்குப் பிறகு வந்த அனைத்து அஞ்சல் வாக்குகளையும் பிரித்துப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தேவைப்பட்டால், அந்த வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாமுவேல் ஏ அலிட்டோ ஜூனியர் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஜோபிடன் கூறியதாவது:-
இன்னும் இறுதி அறிவிப்பு வரவில்லை, வெற்றி அறிவிக்கப்படவில்லை, ஆனால் நமது எண்ணிக்கை நமக்கு தெளிவான மற்றும் உறுதியான தகவலை சொல்கின்றன. பென்சில்வேனியாவில் நாம் வெல்லப் போகிறோம். மொத்தம் 300க்கும் மேற்பட்ட தேர்தல் சபை வாக்குகள் நமக்கு கிடைக்கும்.
நமக்கு 7.4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. டொனால்ட் டிரம்பை விட 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறோம். நாம் பென்சில்வேனியாவை வெல்லப் போகிறோம். நாம் 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசோனாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம்.
நாம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜார்ஜியாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம். நீல சுவரை நம் நாட்டின் நடுவே மீண்டும் கட்டியுள்ளோம். அமெரிக்கர்களின் வாக்களிப்பு ஒரு நள்ள மாற்றத்தைத் தேர்ந்தெடுத்தது. இவ்வாறு பைடன் தனது உரையில் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply