ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவு
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி இந்த மசூதிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சமீபத்தில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என அடையாளம் காணப்பட்டது, அவர் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார்.
இது குறித்து ஆஸ்திரியா மந்திரி சூசேன் ராப் நிருபர்களிடம் கூறியதாவது:-
திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.
உள்நாட்டு புலனாய்வு அமைப்பு “இந்த மசூதிகளுக்கு வருகை தாக்குதல் நடத்தியவரின் தீவிரவாத எண்ணங்களை அதிகரித்ததாக எங்களிடம் கூறியது. மசூதிகளில் ஒன்று மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, ராப் கூறினார்.
ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத சமூகத்தின் அறிக்கையில் “மதக் கோட்பாடு மற்றும் அதன் அரசியலமைப்பு” பற்றிய விதிகளையும், இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தேசிய சட்டங்களையும் மீறியதால் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு மசூதி மூடப்படுவதாகக் கூறி உள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ள 16 பேரில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply