கொழும்பில் பொங்கியெழுந்த பெருமளவான மக்கள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு – 15, அளுத்மாவத்தை – இப்பாவத்த பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்த தகவல் வெளியிட்டுள்ள மக்கள், தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
5000 ரூபா கொடுப்பனவு ஒருமுறை மாத்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்திற்கு மேலதிகமாக எமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 14 நாட்கள் முடக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த சம்பளத்திற்காவும், கூலித் தொழில்களையும் முன்னெடுக்கும் தமக்கு 5,000 ரூபாவில் ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தாம் நிர்கதிக்குள்ளாகியுள்ள இந்த தருணம் வரை தம்மை எந்தவொரு அதிகாரியும் பார்வையிட வரவில்லை – ஆனால் முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தின் பின்னரே இன்று வருகை தந்துள்ளார் எனவும்,
தமக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றை பெற்றுத் தர அதிகாரிகள் முன்வர வேண்டுமென குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply