இந்தியாவிடம் இருந்து இலங்கை 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குகிறது

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.

இலங்கைக்கும் இந்தியா இலவசமாக கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்து உள்ளது. இன்று (வியாழக்கிழமை) கொழும்பு சென்றடையும் அந்த தடுப்பு மருந்துகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு விமான நிலையத்தில் பெற்றுக் கொள்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றான கோவிஷீல்டை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்திடம் இருந்து 20 முதல் 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய உள்ளதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் ஆலேசகர் லலித் வீராதுங்கா தெரிவித்து உள்ளார். இலங்கைக்கு சீனாவும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இதுவரை சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 288 பேர் வரை உயிரிந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply