அஜித் நிவாட் கப்ராலின் பதவியை பறிக்க மேலும் இரண்டு மனுக்கள்

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் நியமனத்தை அதிகாரம் அற்றதாக அறிவித்து கட்டளை பிறப்பிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நிதி அமைச்சர், சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர், மத்திய வங்கியின் நிதி சபை மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இவ்வாறான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply