யாழ்ப்பாணத்திலிருந்து நாடெங்கும் இ.போ. சபை பஸ்சேவைகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மற்றும் அநுராதபுரத்திற்கிடையிலான இ.போ.ச. பஸ் சேவைகள் இந்த மாத முடிவுக்குள் ஆரம்பிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரையான இ.போ.ச. பஸ் சேவைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதோடு இதற்காக ஐந்து இ.போ.ச. பஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. யாழ்ப் பாணத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்கான பஸ் சேவை களை ஆரம்பிப்பதற்கென மேலும் பல இ.போ.ச. பஸ் கள் வழங்கப்படவுள்ளன.
பாதையூடாக யாழ்ப்பாணத்துக்கு பஸ்கள் அனுப்புவதில் கடந்த காலத்தில் சிக்கல் காணப்பட்டது. ஆனால் ஏ௯ வீதி பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதை யடுத்து அப்பகுதிக்கு பஸ்களை தடையின்றி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு கூறியது.
இதேவேளை, கொழும்பு- யாழ்ப்பாணத்திற்கிடையில் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கு இப்போதை க்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.
ஏ௯ வீதி திறக்கப்பட்டவுடன் பயணிகள் பஸ் சேவை களை துரிதமாக ஆரம்பிப்பதற்காக இ.போ.ச. பஸ்களை தயார் நிலையில் வைக்குமாறு அமைச்சர் டலஸ் அழகப் பெரும இ.போ.ச. அதிகாரிகளுக்கு முன்கூட்டி ஆலோ சனை வழங்கியிருந்தார். இதன்படி துரிதமாக இ.போ.ச. பஸ்களை வழங்க வாய்ப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிக்க அனுமதி வழங் குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக் குவரத்து ஆணைக்குழுவைக் கோரியுள்ளது. தற்பொழுது யாழ்ப்பாண தனியார் பஸ் உரிமையாளர்களிடம் சிறிய பஸ்களே உள்ளதாகவும் எனவே அவற்றை சேவையில் ஈடுபடுத்த தற்காலிக அனுமதி வழங்குமாறு கோரியுள்ள தாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க யாழ் பிராந் தியத் தலைவர் பொன். தங்கராசா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply