ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான், தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று பிற்பகல் மும்பை ஐகோர்ட் விசாரிக்கிறது.மும்பை- கோவா சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (வயது 23) உள்ளிட்டவர்களை கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மற்றும் சிறப்பு கோர்ட்டு நிராகரித்த நிலையில், மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு முறையிட்டு உள்ளார்.

ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது பதிலளிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வக்கீல், ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யவில்லை, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்தநிலையில் அவரை கைது செய்து 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது தவறானது என்று வாதிட்டார். இத்துடன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் முடிவடைந்தது.

இதையடுத்து விசாரணையை இன்றைக்கு(புதன்கிழமை) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.ஆர்யன் கானுடன் கைதான அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்த் மற்றும் மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோரின் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் இன்று நடைபெற உள்ளது. இந்த வாதம் நிறைவடைந்த பிறகு ஆர்யன் கான் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply