நடு வீதியில் சண்டித்தனம் காட்டிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
சமூக வலைத்தளங்களில் வெளிவந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கும் காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply