பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற நாச வேலைகளை பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள லாக்கி மராவத் நகரில் நேற்று காலை போலீஸ் அதிகாரிகள் சிலர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். என்ன நடக்கிறது என போலீசார் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply