உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரொன் திரிபானது பலவீனமான வைரஸ் திரிபாகும், அத்துடன் இந்த கொரோனா திரிபானது கடைசி திரிபாகும் என்பது போலியான கருத்துக்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறான கருத்துகள் உலகவாழ் மக்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்வாகும்.
மேலும் கொரோனாத் தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply