இலங்கைக்கான பயணத்தைத் தவிர்க்க இங்கிலாந்து, சிங்கப்பூர் மக்களுக்கு வேண்டுகோள்

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துவிட்டதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே இன்று சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியால் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இலங்கைக்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply