மகாராணியாரின் இறுதிச் சடங்கு நேரலை

கடந்த நான்கு நாட்களாக லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா முழுவதும் பிரமாண்ட திரைகளில் ராணியாரின் இறுதிச் சடங்குகள் நேரலை செய்யப்பட உள்ளது.பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கான நேரலை இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருப்பதாக பிரபல செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் செப்டம்பர் 8ம் திகதி காலமானார் பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத். அவரது உடல் கடந்த நான்கு நாட்களாக லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது பிரபல செய்தி ஊடகமான BBC தங்களின் இணைய பக்கத்தினூடாக ராணியாரின் இறுதிச் சடங்குகளை நேரலை செய்யவிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்காக தற்போது காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை 9,000 தொட்டுள்ளது. மேலும், BBC செய்தி ஊடகம், வானொலி உட்பட தங்களின் அனைத்து சேவைகள் ஊடாகவும் ராணியாரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை நேரலை செய்யவிருப்பதாக BBC சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 8 மணியில் இருந்தே சிறப்பு நேரலை துவங்க உள்ளது. மட்டுமின்றி பிரித்தானியா முழுவதும் பிரமாண்ட திரைகளில் ராணியாரின் இறுதிச் சடங்குகள் நேரலை செய்யப்பட உள்ளது.

மேலும், 125 திரையரங்குகளிலும் ராணியாரின் இறுதிச் சடங்குகள் நேரலை செய்யப்படுகிறது. அத்துடன் யார்க்ஷயர், மேற்கு மிட்லாண்ட்ஸ், தென் மேற்கு மற்றும் வடமேற்கு உட்பட இங்கிலாந்து முழுவதும் திரையிடல்கள் நடைபெற உள்ளது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply