இங்கிலாந்தில் 2 குழந்தைகளுடன் கேரள நர்சு படுகொலை
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நர்சு பணிக்காக குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தின் நார்த்தம்டன்ஷைன் பகுதியில் அவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று அவர் ஆஸ்பத்திரி பணிக்கு செல்லவில்லை. இதனால் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் அவரை தொடர்பு கொண்ட போது செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு நர்சும், அவரது 2 குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். அந்த குழந்கைளுக்கு 6 மற்றும் 4 வயது இருக்கும். இது பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் நர்சும் அவரது குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கொலை செய்தது யார்? என விசாரித்தனர். மேலும் கொலையுண்ட நர்சின் கணவரை பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply