கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவில் சுருங்கும் மக்கள் தொகை
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வரும் சீனாவில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீன தேசத்தில் அதன் வயதை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. 2022ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை சுமார் 1,411,750,000 ஆக இருந்தது என்று பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இறுதியின் மக்கள் தொகையைவிட 850,000 குறைந்துள்ளது. இதேபோல், பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் ஆகவும் இருந்தது. சீனாவின் மக்கள்தொகை கடைசியாக 1960ல் குறைந்தது. 1980ம் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விதிக்கப்பட்ட கடுமையான “ஒரு குழந்தை கொள்கையை” சீனா 2016 ல் முடித்துக் கொண்டது. 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்தது.
ஆனால் சீன அரசு மக்கள்தொகை சரிவை மாற்றியமைக்க தவறிவிட்டது. குழந்தை பிறப்பு விகிதம் மந்தநிலையில் இருக்க வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணியிடத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்கல்வியை நாடுவது உள்ளிட்ட காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜியுஜியன் பெங் கூறுகையில், ” பல தசாப்தங்களாக ஒரு குழந்தை கொள்கையின் காரணமாக சீன மக்களும் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பிறப்பை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயனுள்ள கொள்கைகளைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், கருவுறுதல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது” என்று கூறினார். மேலும், தம்பதிவகள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 10,000 யுவான்களாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கில், ஜினான் நகரம் ஜனவரி 1 முதல் இரண்டாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 600 யுவான் செலுத்தி வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply