பிரேசில் அதிபர் இல்ல கலவரம் 40 வீரர்களை பணிநீக்கம் செய்த அதிபர் லூலா

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று, புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றார்.

இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவரது ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். அதிபர் இல்லத்திலும் கலவரம் பரவியது. இந்தப் போராட்டத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், பிரேசில் அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply