260 இலங்கையர்கள் இந்தோனேஷிய கடலில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் படகில் சென்றுகொண்டிருந்த 260 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். இந்தோனேஷியப் பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர். ஜாவாவுக்கும் சுமாத்திராவுக்கும் இடையிலுள்ள சுண்டா நீரிணையில் மரப்படகொன்றில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் இந்தோனேஷிய கடற் படையினரும் அதிகாலை வேளையில் இவர்களை கைது செய்தனர். இவர்களில் பெண்களும் சிறுவர்களும் இருந்தனரெனத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, விசாரணைக்காக இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரெனக் கூறி னார்.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களை அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுசெல்வதற்குரிய முக்கியதளமாக இந்தோனேஷியா திகழ்கிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தோனேஷியாவைப் பயன்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட 260 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply