ராஜ ராஜ சோழன் விருது பெறும் காயத்திரி விக்கிரமசிங்க
தமிழ்நாடு கோவையில் சுதந்திர வீர போராளி வேலு நாச்சியார் விருது பெற்ற கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் காயத்ரி விக்கிரசிங்க இம் மாதம் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (31.10.2023)அன்று ராஜ ராஜ சோழ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். கடந்த காலத்தில் இவரது சமூக ஆன்மீக பணிகளை முகநூல் வழியாகவும் இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் பார்வையிட்ட பெங்களூர் ருத்ராக் பவுன்டேஷன் ஸ்தாபகர் சத்குரு ஜெய பிரகாஷ் குருஜி இந்த அதி உயர் விருதை வழங்கி கௌரவிக்கின்றார்.
கோவிட் 19 காலத்தில் இவர் ஆற்றிய சமூகப் பணிகளுக்காகவும் கொழும்பு கொள்ளுபிட்டி சின்மியா மிஷன் அமைந்துள்ள பத்தாவது ஒழுங்கையை சின்மியா லேன் என்று பெயர் மாற்றியமைத்தமைக்காகவும் கொழும்பு பொருளை இந்து மயானம் கேட்பாரற்று கிடந்த நிலையில் இவரது செயல் திட்டங்களினால் நவீன முறையில் கட்டட நிர்மாண பணிகள் நடைபெறுவதற்காகவும் இந்த ராஜ ராஜ சோழன் எனும் விருது வழங்கப்படுவதாக ருத்ராக்ஷ் பவுன்டேசன் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply