இஸ்ரேலிய விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் விமானநிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் : ரஸ்ய விமானநிலையத்தில் பரபரப்பு சம்பவம்
ரஸ்யாவில் இஸ்ரேலிய விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் விமானநிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டகெஸ்தான் விமானநிலையத்தில் இஸ்ரேலின் தலைநகரிலிருந்து விமானமொன்று வருவதற்கு சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது.
மக்காசக்லா விமானநிலையத்தில் பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் விமானநிலையஓடுபாதை வரை சென்றுள்ளனர்.
ஏனையவர்கள் விமானநிலையத்திற்கு வெளியே கார்களை நிறுத்தி எவராவது இஸ்ரேலிய ஆவணங்களை வைத்திருக்கின்றார்களா என சோதனையிட்டுள்ளனர்.
காசா மோதல் காரணமாக சீற்றமடைந்த குழுவினர் இஸ்ரேலிய பயணிகளை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என பிபிசி தெரிவித்துள்ளது.
டகெஸ்தானில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் இஸ்ரேலியர்கள் யூதர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ரஸ்யா பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராகவும் அவர்கள் யூதர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராகவும் நடந்துகொண்ட விதத்திற்காகவும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது பலர் காயமடைந்தனர் அவர்களிற்கு மருத்துவசிகிச்சை அளிக்கவேண்டிய நிலையேற்பட்டது என டகெஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply