மருத்துவமனை அருகே மீண்டும் தாக்குதல்: காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்
இந்நிலையில், காசாவில் சிக்கியுள்ள மக்கள், பாதுகாப்பாக வசிக்க, அல்குட் மருத்துவமனை அருகே ஜபாலியா என்ற முகாம் அமைக்கப்பட்டது. குழந்தைகள் அதிகளவில் தங்க வைக்கப்பட்ட இந்த முகாமின் மிக அருகில் இஸ்ரேல் வீசிய குண்டுகள் விழுந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 3 மணி நேரம் குண்டு மழை பொழிந்ததால் பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் படுகாயமடைந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில், இந்தியா அண்மையில் மருந்துப் பொருட்களை எகிப்துக்கு அனுப்பி வைத்தது. எகிப்தில் இருந்து காசாவிற்குள் மருந்து,குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் சென்று சேராததால் பலர் போர் காயங்களால் ஏற்படும், தொற்று நோய்களால் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply