யாழில் சட்டவிரோத மது உற்பத்தி : தம்பதி கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மது உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த தம்பதியிடம் இருந்து 15 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றியுள்ள பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply