புளியங்கூடல் பிள்ளையார் ஆலய நகைகள் மாயம் : விசாரணை கோரி நிற்கும் அடியவர்கள்
யாழ்ப்பாணம் புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர் அது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆலயத்தின் நகை பெட்டித் திறப்பு தொலைந்து விட்டதாக தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
எனினும், உடனடியாக பொலிஸாருக்கோ உபயகாரர்களுக்கோ ஆலயத்தின் தலைவரால் தகவல் வழங்கப்படவில்லை.
சில நாட்களின் பின்னர் குறித்த பணப் பெட்டியில் இருந்த நகைகள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது.
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து குறித்த விடயம் தொடர்பில் தலைவரிடம் பூட்டு உடைக்கப்படாமல் எவ்வாறு பெட்டியில் இருந்த நகைகள் காணாமல் போனது என மக்கள் கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு தெரியாது என பதிலளித்தார்.
எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளை திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் திறப்பை காணவில்லை என்றபோது எல்லோரையும் அழைத்து குறித்த பெட்டியை உடைத்து அதில் இருந்த நகைகளை ஆலய நிர்வாகம் எடுத்து பாதுகாப்பாக வேறொரு திறப்பை போட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
ஆதலால் குறித்த களவானது ஆலய நிர்வாகத்திற்கு தெரிந்து இடம் பெற்றிருக்க கூடும் என்பது எமது சந்தேகமாக இருக்கம் நிலையில் பொலிசார் கால இழுத்தடிப்பைச் செய்யாமல் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply