யூரோ கிண்ணம் 2024 – இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி: தங்க காலணி ஆறு வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பு
2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன்படி, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஸ்பெயின் வீழ்த்தியது. இதன்மூலம், ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.
இறுதிப் போட்டி பெர்லின் நகரில் இடம்பெற்றிருந்தது. இந்தப் போட்டியின் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியிருந்தன.
எனினும், எந்த அணியாளும் கோல் அடிக்க முடியவில்லை.
எனினும், போட்டியின் இரண்டாம் பாதியில் 47வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நிகோ வில்லியம்ஸ் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
அப்போதிருந்து போட்டி சூடிப்பிடிக்க தொடங்கியது. இங்கிலாந்து அணி கோல் அடிக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டிருந்தது. இதன்பலனாக 73வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் கோலை அடித்தது.
இதனால் இரு அணிகளும் 1-1 என்ற ரீதியில் சமனிலையில் இருந்த போது 86வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மைக்கேல் ஓயர்சபால் மற்றுமொரு கோலை அடிக்க இங்கிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பு பறிபோனது.
இதன் மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் நான்காவது முறையாக யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
யூரோ கிண்ண தொடரின் சிறந்த வீரராக ஸ்பெயினின் நடுகள வீரர் என்ஜின் ரோட்ரி மற்றும் விங்கர் லமைன் யமல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் இருவரும் முக்கியப் பங்காற்றினர்.
சிறந்த இளம் வீரராகத் தெரிவு செய்யப்பட்ட லாமின் யமல், பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தீர்க்கமான கோலைப் போட்டதுடன், போட்டித் தொடரில் நான்கு அசிஸ்டையும் பெற்று அசத்தினார்.
இறுதிப் போட்டியில் நிகோ வில்லியம்ஸின் கோலுக்கு வழி வகுத்தவர் 17 வயதான யமல் ஆவார்.
இதேவேளை, அதிக கோல்கள் அடித்ததற்காக ஆறு வீரர்கள் தங்க காலணியை பகிர்ந்து கொண்டனர்.
ஸ்பெயினின் டானி ஓல்மோ, இங்கிலாந்தின் ஹாரி கேன், நெதர்லாந்தின் கோடி காக்போ, ஜெர்மனியின் ஜமால் முசியாலா, ஸ்லோவாக்கியாவின் இவான் ஸ்ரான்ஸ், ஜார்ஜியாவின் ஜார்ஜ் மிகோடாட்ஸே ஆகியோர் அதிக கோல் அடித்த வீரர்கள் ஆவர்
மேலும், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதுக்கு பிரான்ஸ் வீரர் மைக் மெய்க்னன் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply