ஜேர்மன் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி

பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், புதிய பிரதமர், உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடரும் என கூறியுள்ளதோடு, சில நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனின் நெருங்கிய கூட்டாளரான ஜேர்மனியிலிருந்தும் உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று வெளியககியுள்ளது. குறித்த செய்தியில் உக்ரைனுக்கு வழங்கும் உதவியை பாதியாக குறைக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜேர்மனியின் வரைவு வரவு செலவு திட்டத்தில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுவந்த நிதி உதவி, 8 பில்லியன் யூரோக்களிலிருந்து 4 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஜேர்மனி, உக்ரைனுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்துவரும் இரண்டாவது நாடாகும். ஏற்கனவே அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியானால் அமெரிக்கா வழங்கும் நிதி குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் என வெளியாகியுள்ள செய்தியால் உக்ரைனில் அச்சம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply