பிரித்தானிய தமிழர்கள் அதிகளவு இலங்கைக்கு விஜயம்
அதிகவளான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாக உயர்ஸ்தானிகராலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய கடவுச் சீட்டுடைய இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்வதாக பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் பீ.எம். அம்ஸா தெரிவித்துள்ளார்.
நாளந்தம் 30 வீசாக்கள் என்ற அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு வீசா வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையினால் சொத்துக்களை விற்பனை செய்த தமது மருத்துவரின் நண்பர் ஒருவர், இலங்கையிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்து விட்டதாக அம்சா தெரிவித்துள்ளார்.
அதிகளவான தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்கள் பொய்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply