இலங்கை ஜி.எஸ்.பி சலுகையை பெறுவதற்கான நிபந்தனைகள்
இலங்கை அரசு மனித உரிமை தொடர்பில் முன்னெடுத்துள்ள விடயங்களை எழுத்து மூலம் ஜூலை 1ம் திகதிக்கு முன்னர் வழங்கினால், இலங்கைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய கவுன்சில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பரிந்துரைக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது.ஜி.எஸ்.பிளஸ் சலுகையை இலங்கை பெற வேண்டும் ஆனால் பின்வரும் நிபந்தனைகளை இலங்கை அரசு எழுத்து மூலம் சமர்பிக்க கோரப்பட்டுள்ளது. நிபந்தனைகள் வருமாறு :-
1) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைக்கான பல மதிப்புக் குறைப்புக்கள் (ICCPR)
2) அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள்களை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல். இவற்றுள், முக்கிய பொது பதவிகளுக்கு சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான நியமனங்களை மேற்கொள்ளல், சகல அரசியல், இன மற்றும் மதக் குழுக்கள் மற்றும் இலங்கைச் சமூதாயத்திலுள்ள சிறுபான்மை இனத்தவர் ஆகியோரின் நலன்களைப் போதுமான அளவு பிரதிபலிப்பதானதாரு அரசியலமைப்பு சபையினுடாக என்பது உட்பட முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
3) 2005 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் மிகுதிப் பகுதியைச் நீக்குவது, குறிப்பாக விளக்கமின்றித் தடுத்து வைத்தல், நடமாட்ட சுதந்திரக் கட்டுப்பாடு, நியாயாதிக்க மற்றும் பாதிப்பின்மை விலக்கல் ஆகிய சட்டங்கள் மற்றும் 2006 ஆம் ஆண்டு அவசரகாலச் நட்டத்தை நீக்கல் (வர்த்தமானப் பத்திரிகை இல.1474/5/2006) என்பனவாகும்.
4) ICCPR . வுடன் ஒத்தியல்பற்றதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பகுதிகளை அகற்றுதல் ( குறிப்பாக 9,10,11,14,15,16 மற்றும் 26 என்னும் பகுதிகள் ) அல்லது ICCPR. விற்கு தெளிவாக ஒத்தியல்பாகக்கூடிய வகையில் திருத்தியமைத்தல்.
5) பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 8 ஆம் பிரிவிலுள்ள விலக்கல் கூற்றையும் 9 ஆம்பிரிவிலுள்ள பாதிப்பின்மை கூற்றையும் நீக்குதல் அல்லது ICCPR விற்குத் தெளிவாக ஒத்தியல்பாகக்கூடிய வகையில் திருத்தியமைத்தல்.
6) சந்தேக நபர் ஒருவர் அவரது கைது செய்கையை தொடர்ந்து உடனடியாகச் சட்டத்தரணி ஒருவரைச் சந்திப்பதற்கான உரிமையை கொண்டுள்ளதான உத்தேச திருத்தத்தை குற்றவியல் நடவடிக்கை முறை சட்ட தொகுப்பில் மேற்கொள்ளல்.
7) ICCPR வினது முதலாவது விருப்புத்தெரிவு வரைவேடான ஐநா. மனித உரிமைகள் செயற் குழுவிற்கும் சித்திரவதைக்கெதிரான ஐநா. செயற்குழுவிற்கும் தனிநபர்கள் முறையீடுகளைச் சமர்பிப்பதற்கேதுவான சட்டவாக்க நடவடிக்கைகள்.
8) தனிப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக ஐநா. மனித உரிமைகள் செயற்குழுவின் மீதியுள்ள அபிப்பிராயங்களையிட்டுச் செயற்படுவதற்கான நடவடிக்கைகள்.
9) இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ள விருப்பத்தைத் தெரிவித்துள்ள ஐநா.வின் விசேட செயற்பாடுகளுக்கு அனுமதியளித்தல் ( வலுக்கட்டாக காணாமற் போனோருக்கான ஐநா. செயலமர்க் குழு, சித்திரவதை தொடர்பான விசேட ஒத்திசைவாளர், பேச்சு சுதந்திரத்திற்கான ஐநா. விசேட ஒத்திசைவாளர்).
10) வலுக்கட்டாகக் காணாமற் போனோர்களுக்கான ஐநா.செயலாற்று குழு முன் தற்போது நிலுவையிலள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலுள்ள தனிநபர் விடயங்களுக்கான பதில்கள்.
11) 2008 ஆம் ஆண்டின் விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையைப் பிரசுரித்தல்.
12) அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்ரீரீஈ. போராளிகள் மற்றும் ஏனையோர்கள் ஆகியோரது பெயர்ப் பட்டியலொன்றை பிரசுரித்தல் அல்லது அதனை அவர்களின் குடும்பத்துக்கு கிடைக்கச் செய்தல். அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்த நபரையும் விடுபிப்பதற்கு அல்லது அவர்களை விசாரணைக்கு முன் நிறுத்துவதன் மூலம் தடுத்து வைத்திருத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்மானமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
13) சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற சுயாதீன மனிதாபிமான அமைப்பொன்றிற்கு கண்காணிப்பு நோக்கிற்காக சகல தடுப்பு முகாம்களுக்கும் நுழைவதற்கான அனுமதியை வழங்கல்.
14) தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றி அதனை தாமதமின்றி அமுல்படுத்தல்.
15) ஊடகவியலாளர்கள் எவ்வித தொந்தரவுமின்றி தமது தொழில்சார் கடமைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply