மெய்யான ஊடகவியலாளர்களை கண்டறிவதில் சிரமம் நிலவுகிறது : கெஹலிய
மெய்யான ஊடகவியலாளர்களை கண்டறிவதில் சிரமம் நிலவுகின்றதென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.எந்தப் பின்னணியில் எவ்வாறான வகையீடுகளின் அடிப்படையில் ஊடகவியலாளர்களை இனம் காண்பது என்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இரண்டு தரப்பினர் எந்தவிதமான தகுதிகளும் இல்லாமல் தமது பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகவிலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எந்தவிதமான குறைந்தபட்ச தகுதிகளும் நிர்ணயிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த இரண்டு தரப்பினரினதும் அடிப்படை தகுதிகளை இனம் காண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த இரண்டு தரப்பினரும் சில காரணங்களுக்காக உயர் நிலையை அடைகின்ற போதிலும், தகுதிகள் கருத்திற்கொள்ளப் படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளிலிருந்தே ஊடகத்துறை ஆரம்பிக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply