ஐக்கிய நாடுகள் அமைப்பு கொள்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும் : அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
போராட்டங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளில் மாற்றம் தேவை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கொள்கைகளை மீளாய்வு செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65ம் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் பீரிஸ் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.போராட்டங்களுக்கு நிரந்தர தீர்வுத் திட்டங்களை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் புதிய வழிமுறைகளையும் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியான மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்வதற்கான உரிமை மட்டும் உறுதிப்படுத்தினால் போதாது எனவும், நல்ல முறையில் வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் அவா தெரிவித்துள்ளார்.
25 வீதமாகக் காணப்பட்ட வறுமை நிலைமை கடந்த பதினைந்து ஆண்டுகளில் 11 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அணுவாயுதக் களைவு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply