இலங்கையில் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம்
இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உறுதி செய்வதற்கு சர்வதேச, பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரான சிவோண் மக்டொனால்ட் அவர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி எவ்வளவு முயற்சிக்கின்ற போதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவை குறித்து உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை அவசியம் என்ற தனது கருத்துடன் பிரித்தானிய பிரதமர் உடன்படுகின்றாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவோண் மக்டொனால்ட் கேட்டிருந்தார்.
இலங்கையில் என்ன நடந்தது என்பதை அறிய எமக்கு ஒரு பக்கசார்பற்ற விசாரணை அவசியம். செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவை குறித்து நாம் பார்க்கிறோம். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் கூறியவை சரியா என்பதை உறுதி செய்ய ஒரு பக்கசார்பற்ற விசாரணை அங்கு அவசியம் என்றார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன்.
இந்த விடயம் குறித்து பிபிசியிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சிவோண் மக்டொனால்ட்டிடம், இந்த விடயத்தில் பிரித்தானிய தான் அங்கம் வகிக்கும் ஐநா பாதுகாப்புச் சபையின் ஊடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாதா என்று கேட்டதற்கு பதிலளித்த போது, ஐநா பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் இந்த விடயத்தில் முரணாக இருக்கும் நிலையில் அது சிரமம் என்று கூறினார்.
அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விசாரணையின் மூலம் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உறுதி செய்ய முடியாது என்றும் அந்த விசாரணை பக்கசார்பற்ற வகையில் நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் சிமோண்ன் மக்டொனால்ட் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply